ADDED : மே 10, 2026 10:01 PM
அ நிறம் | அளவு
புதுச்சத்திரம்: மணிக்கொல்லை பஸ் நிறுத்தத்தில், பயணிகள் நிழற்குடை அமைக்க, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
புதுச்சத்திரம் அடுத்த மணிக்கொல்லை பஸ் நிறுத்தத்தில் அப்பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், கூலித் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சிதம்பரம், கடலுார் பகுதிகளுக்கு, தினமும் பஸ் ஏறி செல்கின்றனர். இப்பகுதியில் இரண்டு பஸ் நிறுத்தங்கள் உள்ளன. ஆனால் அந்த பஸ் நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடை இல்லை.
இதனால் வெயில் மற்றும் மழைக்காலங்களில், பஸ் ஏற வரும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பொதுமக்கள் நலனை கருத்தில்கொண்டு, மணிக்கொல்லை பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க, அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
