/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அனைத்து தபால் நிலையங்களில் ஆதார் சேவை மையம் அமைக்க கோரிக்கை
/
அனைத்து தபால் நிலையங்களில் ஆதார் சேவை மையம் அமைக்க கோரிக்கை
அனைத்து தபால் நிலையங்களில் ஆதார் சேவை மையம் அமைக்க கோரிக்கை
அனைத்து தபால் நிலையங்களில் ஆதார் சேவை மையம் அமைக்க கோரிக்கை
ADDED : ஏப் 22, 2024 05:55 AM
நடுவீரப்பட்டு: தமிழகத்தில் உள்ள அனைத்து போஸ்ட் ஆபீசில் ஆதார் முகாம் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு நலத்திட்டங்களுக்கும் ஆதார் கார்டு முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆதார்கார்டுகள் எடுக்கும் போது பல தவறுடன் ஆதார் கார்டுகள் வந்தது.
இந்த கார்டுகளில் உள்ள தவறுகளை திருத்தம் செய்திட சில மாதங்களுக்கு முன் தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம்,போஸ்ட் ஆபீஸ் உள்ளிட்ட பல இடங்களில் ஆதார் கார்டில் பெயர் திருத்தம், போன் நெம்பர் சேர்த்தல்,புகைப்படம் புதுப்பித்தல் போன்ற பணிகளை செய்து வந்தனர்.ஆனால் தற்போது பல போஸ்ட் ஆபீஸ்களில் ஆதார் முகாம்கள் நடப்பதில்லை.
இதனால் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதார் சம்மந்தமான சேவைகள் முற்றிலும் தடைபட்டு வருகிறது.இதனால் கல்லுாரி மாணவர்கள் பலர் தங்களது கல்வி உதவித் தொகை பெற முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
வங்கி கணக்கில் இருப்பது போல் ஆதார் கார்டில் திருத்தம் செய்தால் தான் கல்வி உதவித்தொகை பெற முடியும் என்கிற நிலை உள்ளது.
ஆனால் ஆதார் மையங்கள் சரிவர இயங்காததால் மாணவர்கள் திருத்தங்களை செய்ய முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
ஆகையால் தற்போது பள்ளி விடுமுறையில் மாணவர்கள் வீட்டில் உள்ளதால், அனைத்து போஸ்ட் ஆபீசிலும் ஆதார் முகாம்களை நடத்தினால் மாணவர்கள் பயனடைய ஏதுவாக இருக்கும். ஆகையால் ஆதார் முகாம்கள் நடத்திட அதிகாரிகள் முன்வரவேண்டும்.

