ADDED : ஜூன் 11, 2024 06:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த அரங்கூர் கிராமத்தில், 20 அடி கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
திட்டக்குடி அடுத்த அரங்கூர் கிராமத்தை சேர்ந் தவர் நாகராஜன், 35.
இவரது பசுமாடு நேற்று முன்தினம் இரவு அதே பகுதியிலுள்ள, 20 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தது.
தகவலறிந்த திட்டக்குடி தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இறங்கி, பசுமாட்டை உயிருடன் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.