/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிணற்றில் விழுந்த பசு இறந்த நிலையில் மீட்பு
/
கிணற்றில் விழுந்த பசு இறந்த நிலையில் மீட்பு
ADDED : ஜூன் 26, 2024 11:16 PM
பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே தரைக்கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்புத் துறையினர் இறந்த நிலையில் மீட்டனர்.
பெண்ணாடம் அடுத்த சவுந்திரசோழபுரத்தைச் சேர்ந்த பழனிவேல். இவர் நேற்று காலை வீட்டின் அருகே உள்ள வயல்வெளியில் தனது பசு மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.
அப்போது, காலை 8:00 மணியளவில் ராமலிங்கம் என்பவரின் வயலில் இருந்த 25 அடி ஆழமுள்ள தரைக்கிணற்றில் பசு மாடு தவறி விழுந்தது.
தகவலறிந்து 9:00 மணியளவில் வந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான வீரர்கள், கிரேன் மற்றும் கிராம மக்கள் உதவியுடன் பசு மாட்டை இறந்த நிலையில் மீட்டனர். இது குறித்து பெண்ணாடம் போலீசார் விசாரித்தனர்.