/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிணற்றில் விழுந்த முதியவர் மீட்பு
/
கிணற்றில் விழுந்த முதியவர் மீட்பு
ADDED : மே 01, 2024 11:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி அருகே பாழடைந்த கிணற்றில் விழுந்த முதியவரை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.
பண்ருட்டி அடுத்த ஆத்திரிக்குப்பம் கிராமத்தில் உள்ள முந்திரி தோப்பில் சுமார் 65 அடி ஆழமுள்ள பயன்பாடற்ற தண்ணீர் இல்லாத கிணற்றில், அதே பகுதியை சேர்ந்த ராமசந்திரன்,65; தவறி விழுந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த முத்தாண்டிக்குப்பம் தீயணைப்பு அலுவலர் இளங்கோ தலைமையிலான வீரர்கள் பாதுகாப்பாக கிணற்றில் விழுந்த முதியவர் ராமசந்திரனை மீட்டனர்.
மீட்கப்பட்ட முதியவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

