/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிணற்றில் விழுந்த முதியவர் மீட்பு
/
கிணற்றில் விழுந்த முதியவர் மீட்பு
ADDED : ஜூலை 04, 2024 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பூர் : வேப்பூர் அடுத்த லட்சுமணபுரத்தைச் சேர்ந்தவர் சேகர், 54. இவர், நேற்று காலை 7:00 மணியளவில், தனது வயலை சுற்றிப்பார்க்க சென்றபோது, எதிர்பாராதவிதமாக தவறி, அங்கிருந்த 70 அடி ஆழமுள்ள தரைக்கிணற்றில் தவறி விழுந்தார். உடன், அவரே தனது மொபைல் போனில், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சதாசிவம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, கிணற்றில் உயிருக்கு போராடிய சேகரை பாதுகாப்பாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.