அடிப்படை வசதிகள் நிறைவேற்ற குடியிருப்போர் சங்கம் மனு
அடிப்படை வசதிகள் நிறைவேற்ற குடியிருப்போர் சங்கம் மனு
ADDED : மே 31, 2026 05:10 PM
கடலுார்: கோண்டூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டுமென, குடியிருப்போர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து கடலுார் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில், அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் வெங்கட் ரமணி, தலைவர் பச்சைப்பன் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனு:
கோண்டூர், நத்தப்பட்டு, தோட்டப்பட்டு, பாதிரிக்குப்பம், திருவந்திபுரம், குண்டு உப்பலவாடி ஆகிய ஊராட்சிகளில் பொது இடத்தில் பூங்கா அமைப்பது, நடைபாதை அமைப்பது, குடிநீர் இணைப்பு, சாலைகளை சீரமைப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
நிர்வாகிகள் செல்வராஜ், சண்முகம், கண்ணன், தனுசு, பாலு, பிரசாத், கோமதிநாயகம், சிங்காரம், பாலமுருகன், குமார் உடனிருந்தனர்.
