ADDED : மார் 04, 2025 06:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற கூட்டுறவுத் துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது.
கடலுார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடந்த கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர்கள் பாஸ்கர், தேவகுமாரன் பேசினர். 70 வயதிற்கு மேற்பட்ட அலுவலர்கள் கவுரவிக்கப்பட்டனர். மேலும் அவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.
கடலுார், விழுப்புரம், சென்னை, கள்ளக்குறிச்சி, மற்றும் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஓய்வு பெற்ற கூட்டுறவுத் துறை அலுவலர்கள் 65 பேர் பங்கேற்றனர்.
ஒருங்கிணைப்பு கூட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.