/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாலாயணம் செய்யாமல் திருப்பணி; நெல்லிக்குப்பம் பக்தர்கள் அதிருப்தி
/
பாலாயணம் செய்யாமல் திருப்பணி; நெல்லிக்குப்பம் பக்தர்கள் அதிருப்தி
பாலாயணம் செய்யாமல் திருப்பணி; நெல்லிக்குப்பம் பக்தர்கள் அதிருப்தி
பாலாயணம் செய்யாமல் திருப்பணி; நெல்லிக்குப்பம் பக்தர்கள் அதிருப்தி
ADDED : ஜூன் 16, 2024 10:35 PM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் கும்பாபிஷேகத்துக்கு முன் செய்ய வேண்டிய பாலாயணம் பூஜை செய்யாமலேயே திருப்பணியை துவக்கியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
நெல்லிக்குப்பம் காந்தி வீதியில் பழமையான பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது.
தமிழக இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள இக்கோவிலில் மூலவர் சிலை அத்திமரத்தாலானது சிறப்பாகும்.இக்கோவிலில் கடைசியாக 2002ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
ஆன்மீக விதிப்படி ஒவ்வொரு 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்வது மரபாகும்.ஆனால் பல்வேறு காரணங்களால் வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம் 22 ஆண்டுகள் ஆகியும் நடைபெறாதது பக்தர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அறநிலையத்துறை சார்பில் திருப்பணிக்கு 15 லட்சம் நிதி ஒதுக்கி டெண்டர் விட்டனர். திருப்பணி துவங்குவதற்கு முன் பாலாயணம் பூஜை செய்ய வேண்டும்.
ஆனால் பாலாயணம் பூஜை நடப்பதற்குள் டெண்டர் எடுத்தவர் திருப்பணி வேலை செய்வதற்கு பொருட்களை இறக்கினார்.
இதை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து பாலாயணம் செய்யாமல் எப்படி திருப்பணியை துவக்கலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பரபரப்பு நிலவியதால் பணியை துவக்காமல் சென்றனர்.