/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓட்டு எண்ணும் மையம் முன்னேற்பாடுகள் ஆய்வு
/
ஓட்டு எண்ணும் மையம் முன்னேற்பாடுகள் ஆய்வு
ADDED : ஏப் 14, 2024 06:04 AM

கடலுார்: கடலுார் லோக்சபா தேர்தலையொட்டி ஓட்டு எண்ணும் மையத்தில், பாதுகாப்பு உள்ளிட்ட முன்னேற்பாடுகளை, கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.
லோக்சபா தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. ஓட்டுப்பதிவு முடிந்ததும், கடலுார் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு இயந்திரங்கள், கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கல்லுாரி யில் பாதுகாப்பாக வைக்கப்படவுள்ளது.
அதே வளாகத்தில் ஜூன் 4ம் தேதி ஓட்டுகள் எண்ணப்படுகிறது.
அதையொட்டி, தேவனாம்பட்டினம் கல்லுாரியில், ஓட்டு இயந்திரங்கள் வைக்க பாதுகாப்பு அறை, ஓட்டு எண்ணும் மையம் தயார்படுத்துதல், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஏற்பாடு களை, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான அருண்தம்புராஜ், எஸ்.பி., ராஜாராம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

