/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உளுந்து சாகுபடி பயிற்சி: விவசாயிகள் பங்கேற்க அழைப்பு
/
உளுந்து சாகுபடி பயிற்சி: விவசாயிகள் பங்கேற்க அழைப்பு
உளுந்து சாகுபடி பயிற்சி: விவசாயிகள் பங்கேற்க அழைப்பு
உளுந்து சாகுபடி பயிற்சி: விவசாயிகள் பங்கேற்க அழைப்பு
ADDED : பிப் 22, 2025 07:25 AM
விருத்தாசலம்; விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 24ம் தேதி நடக்கும் 'கிசான் சம்மான் சமரோஹ்' நேரடி இணைய ஒளிபரப்பு நிகழ்ச்சியில் விவசாயிகள் பங்கேற்க வேண்டும் என, திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது செய்தி குறிப்பு;
பீகார் மாநிலம் பாகல்பூரில் வரும் 24ம் தேதி பாரத பிரதமரின் பி.எம்., கிசான் திட்டத்தின் 'கிசான் சம்மான் சமரோஹ்' நிகழ்ச்சி நடக்கிறது.
இவ்விழாவின் நேரடி இணைய ஒளிபரப்பு, அன்று பகல் 2:00 மணி முதல் பகல் 3:30 மணி விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
எனவே, இந்த நேரடி ஒளிபரப்பு மற்றும் உளுந்து சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சியில் மாவட்ட விவசாயிகள் பங்கேற்று பயன்பெற வேண்டும்.இவ்வாறு செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.