ADDED : ஜூலை 07, 2024 04:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம்: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் அருகே பேசி கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதனை கண்டித்து கடலுார் - விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலை மந்தாரக்குப்பம் புதிய பஸ் நிலையம் முன் வி.சி., கட்சி வழக்கறிஞர் அணி நேற்று காலை 10:40 மணிக்கு சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதை தொடர்ந்து 10:50 மணியளவில் மறியலை கைவிட்டு சென்றனர்.