/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல்லிக்குப்பத்தில் சாலை அளவீடு பணி
/
நெல்லிக்குப்பத்தில் சாலை அளவீடு பணி
ADDED : மே 25, 2024 01:20 AM

நெல்லிக்குப்பம்: தினமலர் செய்தி எதிரொலியாக நெல்லிக்குப்பம் - கீழ்அருங்குணம் சாலையில் அளவீடு பணி நடந்தது.
கடலுாரில் இருந்து மடப்பட்டு வரை சாலை விரிவாக்கப் பணிகள் நடந்தது. இதனால், நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் மட்டும் முன்பைவிட பல இடங்களில் சாலை குறுகியது. தன்னார்வலர்கள் பல போராட்டங்களை நடத்தியும் பயனில்லை.
தற்போது நெல்லிக்குப்பம் நகரத்தில் இருந்து கீழ்அருங்குணம் வரை செல்லும் சாலை விரிவாக்க பணி நடக்கிறது. நகராட்சி பகுதி முடியும் இடத்தில் இருந்து கீழ்அருங்குணம் வரை சாலை விரிவாக்க பணிகள் முடிந்தது. நகராட்சி பகுதியான ஆலை ரோட்டில் 2 கி.மீ., துாரத்திற்கு ஆக்கிரமிப்பு இடத்தை அளவீடு செய்து தரும்படி நகராட்சி சர்வேயருக்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடந்த 1 மாதத்துக்கு முன் நோட்டீஸ் வழங்கினர்.
ஆனால் சர்வேயர் அதற்கான பணியை செய்யாமல் அலட்சியமாக இருந்தார். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து அந்த 2 கி.மீ., துாரத்துக்கு அளவீடு பணி செய்யும் பணி நேற்று துவங்கியது.
நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர்கள் வீரராகவன், மணிவேல் முன்னிலையில் சர்வேயர் நந்தகுமார் அளவீடு பணியை மேற்கொண்டார்.

