/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதை ஸ்டேஷனில் காதல் திருமண ஜோடி தஞ்சம்
/
விருதை ஸ்டேஷனில் காதல் திருமண ஜோடி தஞ்சம்
ADDED : மே 07, 2024 04:08 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் காதல் திருமண ஜோடி, பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.
விருத்தாசலம் பூதாமூர் புதிய காலனியை சேர்ந்தவர் பச்சான் மகன் செல்வநாதன், 26. மாஸ்டர். விருத்தாசலத்தில் உள்ள ஓட்டலில் மாஸ்டராக வேலை செய்தார். அப்போது, ஓட்டல் உரிமையாளரின் உறவினரான சின்னசேலம் அடுத்த எலியத்துார் பகவான் மகள் பனித்துளி, 23, என்பவர், ஓட்டலுக்கு வந்து சென்றபோது, செல்வநாதனுடன் காதல் ஏற்பட்டது.
இருவரும் நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், பனித்துளி வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய பனித்துளி, விருத்தாசலம் வந்து செல்வநாதனுடன் பூதாமூர் கோவிலில் நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் பாதுகாப்பு கேட்டு, விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா முன்னிலையில் தஞ்சமடைந்தனர்.
போலீசார் விசாரணையில், இருவரும் மேஜர் என்பதால், இருவரது பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து, காதல் கணவருடன் பனித்துளி அனுப்பி வைக்கப்பட்டார்.