/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓட்டுக்கு வழங்கப்படும் ரூ.200, 300 உங்களுக்கு எந்த மாற்றத்தையும் தராது: பா.ஜ., வேட்பாளர் கார்த்தியாயினி பிரசாரம்

ADDED : ஏப் 17, 2024 11:33 PM

சிதம்பரம் : 200 க்கும், 300 க்கும் உங்கள் வாக்குகளை விற்பனை செய்ய வேண்டாம், அந்த பணம் எந்த மாற்றத்தையும் தராறு என, சிதம்பரம் தொகுதி மேம்பட நடவடிக்கை எடுப்பேன் என, பா.ஜ., வேட்பாளர் கார்த்தியாயினி பேசினார்.
சிதம்பரம் லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் கார்த்தியாயினி, நேற்று சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் சிதம்பரம் பகுதிகளில், கூட்டணி கட்சியினருடன், தாமரை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு இறுதி கட்ட பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: சிதம்பரம் லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணி கட்சியினர் ஓட்டுக்கு காசு கொடுத்தால் வெற்றி பெற்றுவிடலாம் என, நினைக்கின்றனர். ஓட்டுக்காக அவர்கள் வழங்கும், 200, 300 ரூபாய், ஒரு நாள் செலவுக்கே பத்தாது. அந்த பணத்தால் வாழ்க்கையில் எந்த வகையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி விடாது.
மக்களுக்கான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி செய்துள்ளார். வீடு இல்லாத ஏழை குடும்பங்களுக்கு வீடு, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, தொழில் துவங்க கடனுதவி போன்ற நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.
மீண்டும் மோடி பிரதமராக பொறுப்பேற்றவுடன், சிதம்பரம் தொகுதியில் நீட் கோச்சிங் சென்டர், பள்ளிகளின் அடிப்படை வசதி மேம்பாடு என பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறேன். வி.சி., தலைவர் திருமாவளவனுக்கு அவரது சொந்த ஒன்றிய பகுதியிலேயே கடும் எதிர்ப்பு உள்ளது.
இளைஞர்களை திசை திருப்பி, தவறான பாதைக்கு கொண்டு செல்கிறார். தேர்தலுக்காக மட்டும் பொதுமக்களை சந்திப்பவருக்கு ஓட்டளிக்காமல், சிதம்பரம் தொகுதியில் முன்னேற்றத்திற்காக தாமரை சின்னத்தில் ஓட்டளிக்க கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
அப்போது பா.ஜ., மாவட்ட தலைவர் மருதை, பா.ஜ., சிதம்பரம் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் பாலசுப்ரமணியன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் அருள், மாவட்ட துணைத் தலைவர் கோபிநாத் கணேசன், பா.ம.க., மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் மற்றும் பலர் பங்கேற்றனர்.