/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல்லிக்குப்பத்தில் வாய்க்காலை துார்வார ரூ.25 லட்சம் நிதி வழங்கல்
/
நெல்லிக்குப்பத்தில் வாய்க்காலை துார்வார ரூ.25 லட்சம் நிதி வழங்கல்
நெல்லிக்குப்பத்தில் வாய்க்காலை துார்வார ரூ.25 லட்சம் நிதி வழங்கல்
நெல்லிக்குப்பத்தில் வாய்க்காலை துார்வார ரூ.25 லட்சம் நிதி வழங்கல்
ADDED : மார் 04, 2025 07:04 AM

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் நகராட்சி வழியாக செல்லும் வாய்க்காலை துாவார ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலை மற்றும் ஏ.எம்.எம்.அறக்கட்டளையும் இணைந்து ரூ.25 லட்சம் வழங்கினர்.
நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு நமக்கு நாமே திட்டத்தில் மோரை எவரெட்புரம்,திருவள்ளுவர் நகர்,அவுலியா நகர்,பில்லாலி வழியாக மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்க தமிழக அரசு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது.இந்த நிதியை பெற மக்களின் பங்களிப்பாக 25 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்.
இந்த கால்வாய் அமைப்பதன் மூலம் மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளான மோரை எவரெட்புரம், திருவள்ளுவர் நகர் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் கால்வாய் வழியாக கெடிலம் ஆற்றுக்கு சென்றுவிடும். எனவே மக்கள் நலன்கருதி இந்த திட்டத்தில் மக்களின் பங்களிப்பான 25 லட்சத்தை ஆலை நிர்வாகம் வழங்க வேண்டுமென சேர்மன் ஜெயந்தி கோரிக்கை விடுத்திருந்தார்.
அதையேற்று முருகப்பா குழுமத்தின் அங்கமான ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலை மற்றும் ஏ.எம்.எம்.,அறக்கட்டளையும் இணைந்து 25 லட்சம் வழங்க சம்மதித்தனர்.
நேற்று கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் ஏ.எம்.எம்.அறக்கட்டளை நிர்வாக அதிகாரி நாராயணன் ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலை உதவி துணைத்தலைவர் பாண்டியன் ஆகியோர் 25 லட்சத்துக்கான காசோலையை சேர்மன் ஜெயந்தி நகராட்சி கமிஷ்னர் கிருஷ்ணராஜனிடம் வழங்கினர்.
பொதுமேலாளர் கேசவன், உதவி பொது மேலாளர்கள் மரிய பிரான்சிஸ் சேவியர், அருண்பிரசாத், உதவி மேலாளர் சத்யநாராயணன், ஏ.எம்.எம். நிர்வாக அலுவலர் நாராயணசாமி உடனிருந்தனர்.