sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

44,689 பயனாளிகளுக்கு ரூ. 386.92 கோடி நலத்திட்ட உதவி; கடலுார் அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்கல்

/

44,689 பயனாளிகளுக்கு ரூ. 386.92 கோடி நலத்திட்ட உதவி; கடலுார் அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்கல்

44,689 பயனாளிகளுக்கு ரூ. 386.92 கோடி நலத்திட்ட உதவி; கடலுார் அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்கல்

44,689 பயனாளிகளுக்கு ரூ. 386.92 கோடி நலத்திட்ட உதவி; கடலுார் அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்கல்


ADDED : பிப் 22, 2025 07:26 AM

Google News

ADDED : பிப் 22, 2025 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடலுாரில் நடந்த விழாவில், 1,476 கோடி ரூபாய் மதிப்பில் 6,68,000 பொதுமக்கள் பயன்பெறும் முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் திறந்து வைத்தார். மேலும் 178 கோடி ரூபாய்க்கு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி 45,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

கடலுார், மஞ்சக்குப்பம் மைதானத்தில் பிரம்மாண்டமான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் 12,226 பயனாளிகளுக்கு 164 கோடி மதிப்பில் நல உதவிகள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 11,716 பயனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் பட்டா உதவிகள், 84 பயனாளிகளுக்கு கல்வி உதவித் தொகை, 61 பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகை உள்ளிட்ட 12,226 பயனாளிகளுக்கு 164 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

5,025 பயனாளிகளுக்கு 55.33 கோடி ரூபாய் மதிப்பில் குடியிருப்புகள், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 500 பயனாளிகளுக்கு குடியிருப்புகள், 225 பயனாளிகளுக்கும், புனரமைக்கப்பட்ட ஊரகக் குடியிருப்பு திட்டத்தில் 4,300 பயனாளிகள் என மொத்தம் 5,025 பயனாளிகளுக்கு 55.23 கோடி ரூபாய் மதிப்பில் நலத் திட்ட உதவி வழங்கினார்.

107 கோடி ரூபாய் மதிப்பில் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 16,815 குழுக்களை சேர்ந்தவர்களுக்கு வங்கிக் கடன், வேளாண் பொறியியல் துறை சார்பில் 36 பயனாளிகளுக்கு பவர் டில்லர், 13 பயனாளிகளுக்கு பவர் வீடர், 1 பயனாளிக்கு கரும்பு அறுவடை இயந்திரம், 2 பயனாளிகளுக்கு உழுவு இயந்திரம், 2,121 பயனாளிகளுக்கு புதிய ரேஷன்கார்டுகள் வழங்கினார்.

முதல்வரின் கிராமச் சாலைகள் திட்டத்தில் 110 சாலைப் பணிகள், 10 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் உள்ளிட்ட 133 புதிய திட்டப் பணிகளுக்கு 120.81 கோடி மதிப்பிலும், பள்ளிக் கல்வித்துறை சார்பில், 21.25 கோடி மதிப்பில் 75 வகுப்பறை கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

173.39 கோடி ரூபாய் மதிப்பில் 148.7 கி.மீ. நீளத்திற்கு பாதாள சாக்கடைத் திட்டம், சுத்திகரிப்பு நிலையம், 26.67 கோடி ரூபாய் மதிப்பில் 5,409 குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகிக்கும் திட்டம், 16.13 கோடி மதிபபில் பண்ருட்டி பலா மதிப்புக்கூட்டு மையம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த 384.41 கோடி ரூபாய் மதிப்பில் 178 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

72.67 கோடி ரூபாய் மதிப்பில் 9 கிராம ஊராட்சி செயலகக் கட்டடங்கள், 61 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள், அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தில் 4 சமுதாயக் கூடங்கள் உள்ளிட்ட 225 முடிவுற்றத் திட்டப் பணிகள்; வணிகவரி, பதிவுத்துறை சார்பில் 11 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சிதம்பரம் ஒருங்கிணைந்த சார் பதிவாளர் அலுவலகக் கட்டடம்; பொது நுாலகத்துறை சார்பில் 10 பொது நுாலக கட்டடங்கள்; கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 21.28கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சி.என்.பாளையம் அரசு கால்நடை மருந்தக கட்டடம், சேத்தியாத்தோப்பு பால பண்ணை உள்ளிட்ட 8 புதிய திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

57.96 கோடி ரூபாயில் கட்டப்பட்ட 560 அடுக்குமாடி குடியிருப்புகள், 4.82 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தை திறந்து வைத்தார்.

கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்த விழாவில் 384.41 கோடி ரூபாய் மதிப்பில் 178 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 704.89 கோடி ரூபாய் மதிப்பில் 602 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 386.92 கோடி ரூபாய் மதிப்பில் 44,689 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் முதல்வரால் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us