/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் ஆசிரியர் வீட்டில் ரூ.5.50 லட்சம் நகை கொள்ளை
/
கடலுார் ஆசிரியர் வீட்டில் ரூ.5.50 லட்சம் நகை கொள்ளை
கடலுார் ஆசிரியர் வீட்டில் ரூ.5.50 லட்சம் நகை கொள்ளை
கடலுார் ஆசிரியர் வீட்டில் ரூ.5.50 லட்சம் நகை கொள்ளை
ADDED : ஏப் 27, 2024 04:38 AM

கடலுார் : ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து 10 சவரன் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார், மஞ்சக்குப்பம், நேரு நகரைச் சேர்ந்தவர் பால் கிரகோரி, 58; மேல்பட்டாம்பாக்கம் அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவி அந்தோணியம்மாள் நெல்லிக்குப்பம் அரசு பள்ளி ஆசிரியர். இருவரும் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றனர். மாலை வீடு திரும்பினர். வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 10 சவரன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.
தகவலறிந்த டி.எஸ்.பி., பிரபு, புதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். புகாரின் பேரில், புதுநகர் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.