/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறந்த கல்வி சேவை அளிப்பதில் சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் பள்ளி முதன்மை
/
சிறந்த கல்வி சேவை அளிப்பதில் சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் பள்ளி முதன்மை
சிறந்த கல்வி சேவை அளிப்பதில் சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் பள்ளி முதன்மை
சிறந்த கல்வி சேவை அளிப்பதில் சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் பள்ளி முதன்மை
ADDED : மே 28, 2024 11:25 PM

நெய்வேலி மந்தாரக்குப்பம் சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறந்த கல்வி சேவை அளிப்பதில் முதன்மையானதாக உள்ளதாக, பள்ளி தாளாளர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:
மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதில் சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் பள்ளி முதன்மையாக உள்ளது. தொடர்ந்து பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி சாதனை படைத்து வருகிறது. நவீன வசதிகளுடன் ஆய்வகங்கள், விஸ்தாரமான வகுப்பறைகள், ஸ்மார்ட் வகுப்பறை, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் கல்வி அளிக்கப்படுகிறது.
திறமையான மாணவர்களை உருவாக்கும் பள்ளியாக திகழ்கிறது. மாணவர்களை ஊக்கப்படுத்தவும், ஆராய்ச்சி திறனை மேம்படுத்தவும் 'அடல் டிங்கர்' ஆய்வகம் திறக்கப்பட் டுள்ளது. சி.சி.டி.வி., வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன அறிவியல் ஆய்வகம் மற்றும் நுாலகம் போன்ற வசதிகள் உள்ளது.
யோகா, கராத்தே, கீ போர்டு, கலை மற்றும் கைவினை பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. நெய்வேலி மற்றும் சுற்று வட்டார பகுதி மாணவர்களின் கல்வி கனவை நனவாக்கும் உயரிய நோக்கத்தில், 35 ஆண்டுகளாக பள்ளி நிர்வாகம் செயல்படுகிறது.
மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வர பஸ் வசதி உள்ளது. தற்போது மழலையர் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என, பள்ளி தாளாளர்கள் ராஜாராமன், மாறன், சீத்தாராமன், கார்த்திகேயன், செந்தில்குமார், பாரூக், ஆறுமுகம், சங்கீதாபிரியா ராஜாராமன் தெரிவித்தனர்.