/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு விழிப்புணர்வு
/
விருதை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு விழிப்புணர்வு
ADDED : மே 14, 2024 05:29 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் ரயில் நிலையத்தில், இருப்புப்பாதை போலீசார் சார்பில் ரயில் பயணிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமை தாங்கினார். அதில், பல்லவன் சூப்பர் பாஸ்ட் ரயிலில் வந்த பயணிகள், நடைமேடையில் காத்திருந்த பயணிகளுக்கு ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மொபைலில் பேசியபடி ரயில் பாதையை கடக்கக் கூடாது. ஓடும் ரயிலில் ஏறவோ இறங்கவோ கூடாது. படியில் பயணம் செய்ய கூடாது.
அறிமுகம் இல்லாத நபர்கள் கொடுக்கும் உணவுகளை சாப்பிட வேண்டாம் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கப்பட்டன.
சப் இன்ஸ்பெக்டர்கள் முத்துகிருஷ்ணன், சின்னப்பன், மணிவண்ணன் உட்பட ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார், ரயில் நிலைய ஆட்டோ ஓட்டுனர்கள் பங்கேற்றனர்.
தனிப்பிரிவு ஏட்டு ராம்குமார் நன்றி கூறினார்.
இதேபோல், விழுப்புரம் பாசஞ்சர், வைகை சூப்பர் பாஸ்ட், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

