ADDED : மே 16, 2024 11:32 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுாரில் மெய்கண்டார் திருக்கூட்டம் சார்பில் சைவ சித்தாந்த பயிற்சி முகாம் வரும் 20ம் தேதி துவங்குகிறது.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் அருகில் சித்தாந்த சைவ நெறி அறக்கட்டளை அரங்கத்தில், மெய்கண்டார் திருக்கூட்டம் சார்பில் வரும் 20ம் தேதி முதல் 27 வரையில், சைவ சித்தாந்த பயிற்சி முகாம் நடக்கிறது.
பயிற்சி முகாமை, 20ம் தேதி காலை திருவாடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் துவக்கி வைத்து, ஆசி வழங்குகிறார். ஏற்பாடுகளை மெய்கண்டார் திருக்கூட்டம் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
