/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜெயின் ஜூவல்லரியில் அட்சய திருதியை விற்பனை
/
ஜெயின் ஜூவல்லரியில் அட்சய திருதியை விற்பனை
ADDED : மே 10, 2024 09:50 PM

விருத்தாசலம்: விருத்தாசலம் ஸ்ரீ ஜெயின் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை நடந்தது.
விருத்தாசலம் ஸ்ரீ ஜெயின் ஜூவல்லரியில், அட்சய திருதியையொட்டி நேற்று காலை 7:00 மணி முதல், சிறப்பு விற்பனை துவங்கியது. வாடிக்கையாளர்கள் தங்கம், வைரம், பிளாட்டினம் உள்ளிட்ட பொருட்களை ஆர்வமுடன் தேர்வு செய்தனர். இதற்காக, தனித்தனி பிரிவுகளில் ஏராளான டிசைன்களில் நகைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
வெள்ளிப் பொருட்களுக்கு என தனியாக உள்ள ேஷாரூமில் வெள்ளித் தட்டு, டம்ளர், கொலுசு, செயின், மோதிரம் மற்றும் கிப்ட் பொருட்களை ஆர்வமுடன் தேர்வு செய்தனர். உரிமையாளர்கள் அகர் சந்த், சுரேஷ் சந்த், ரமேஷ் சந்த், தீபக் சந்த், அரியந்த் ஆகியோர் விற்பனையை துவக்கி வைத்தனர்.
கடையின் கீழ்தளம் மற்றும் எதிர்புறம் வாகன நிறுத்தம் இருப்பதால், வாடிக்கையாளர்கள் பொறுமையாக நகைகளை தேர்வு செய்தனர்.