/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சமரச சுத்த சன்மார்க்க சங்கம் நன்றி அறிவிப்பு கூட்டம்
/
சமரச சுத்த சன்மார்க்க சங்கம் நன்றி அறிவிப்பு கூட்டம்
சமரச சுத்த சன்மார்க்க சங்கம் நன்றி அறிவிப்பு கூட்டம்
சமரச சுத்த சன்மார்க்க சங்கம் நன்றி அறிவிப்பு கூட்டம்
ADDED : மே 01, 2024 11:44 PM

வடலூர்: வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சங்கங்களின் சார்பில், சர்வதேச மையம் அமைக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நடந்தது.
தனியார் திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் வடலுார் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க மாநில தலைவர் டாக்டர் அருள் நாகலிங்கம் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் டாக்டர் வெற்றிவேல், மாநில பொருளாளர் நஞ்சுண்டன் முன்னிலை வகித்தனர். அமைப்பு தலைவர் அருள்இளங்கோ வரவேற்றார்.
கூட்டத்தில், சுத்த சன்மார்க்கத்திற்கு அரசு சார்பில் வள்ளலார் 200 முப்பெரும் விழா, வள்ளலார் சர்வதேச மையம். வள்ளலார் பல்லுயிர் காப்பகம், தொடர் அன்னதானம் அறிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது, சத்திய ஞான சபைக்கு இடத்தை தானமாக வழங்கிய பார்வதிபுரம் கிராம மக்களுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, சர்வதேச மையம் வேண்டும் என வலியுறுத்தி சன்மார்க்க கொடியை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பினர். வழக்கறிஞர் சீனிவாசனின் திருவருட்பா இசை நிகழ்ச்சி நடந்தது.
சங்க துணைத்தலைவர் வெங்கடேசன், வடலூர் தலைவர் ராஜேந்திரன், சந்திரகாசு, கருங்குழி கிஷோர் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

