ADDED : மே 24, 2024 11:03 PM
அ நிறம் | அளவு
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையத்தில் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை ரோந்து சென்றனர்.
அப்போது சி.என்.பாளையம், பட்டீஸ்வரம் ஓடையில் இருந்து மழவராயநல்லுார் வேலாயுதம், 45, மாட்டு வண்டியில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தார்.
போலீசார் மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப் பதிந்து வேலாயுதத்தை கைது செய்தனர்.
