ADDED : மே 12, 2026 11:52 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: வெள்ளாற்றில் மணல் கடத்திய டிராக்டர் டிப்பரை போலீசார் பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு ரோந்து சென்றனர். அப்போது, கணபதிகுறிச்சி வெள்ளாற்றில் இருந்து மணல் கடத்தி வந்த டிராக்டர் டிப்பரை மடக்கிப் பிடித்து, டிரைவரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர், அதே பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் கோபி, 27, என்பது தெரிந்தது. போலீசார் வழக்குப் பதிந்து கோபியை கைது செய்தனர். டிராக்டர் டிப்பர் பறிமுதல் செய்யப்பட்டது.
