sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வெள்ளாற்றில் தொடரும் மணல் திருட்டு

/

வெள்ளாற்றில் தொடரும் மணல் திருட்டு

வெள்ளாற்றில் தொடரும் மணல் திருட்டு

வெள்ளாற்றில் தொடரும் மணல் திருட்டு


ADDED : ஜூன் 29, 2024 05:52 AM

Google News

ADDED : ஜூன் 29, 2024 05:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் இரவு நேரங்களில் தொடரும் மணல் திருட்டைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் துவங்கும் வெள்ளாற்றின் வடக்குப்பகுதி கட்டுக்கரை, பெரியகுப்பம், சின்னகுப்பம், வீரமுடையாநத்தம், பெரியநற்குணம், பு.ஆதனுார், அகரஆலம்பாடி, பெருவரப்பூர், கோட்டுமுளை, சிறுவரப்பூர், கம்மாபுரம் வரை 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.

அதே போல வெள்ளாற்றின் தென் பகுதியில் அள்ளூர், குமாரக்குடி, மழவராயநல்லுார், முடிகண்டநல்லுார், சாந்திநகர், காவலக்குடி, கூடலையாத்துார், அம்புஜவல்லி பேட்டை என 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. வெள்ளாற்றினை மூலதனமாக வைத்து இரவு நேரங்களில் டிராக்டர்கள், லாரிகள், இருசக்கர வாகனங்கள் என மணல் திருட்டு பகிரங்கமாக நடந்து வருகிறது.

மணல் திருட்டு நடப்பதற்கு உள்ளூர் போலீஸ்காரர்களே உடந்தையாக செயல்படுவதால் இரவு நேரங்களில் மட்டுமின்றி பகலிலும் மணல் கொள்ளை தொடர்கிறது.

எனவே, வெள்ளாற்றில் தொடரும் மணல் கொள்ளையைத் தடுக்க எஸ்.பி., நேரடியாக ஆய்வு செய்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us