/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சரஸ்வதி வித்யாலயா பள்ளி ஆண்டு விழா
/
சரஸ்வதி வித்யாலயா பள்ளி ஆண்டு விழா
ADDED : மார் 02, 2025 04:31 AM

கடலுார்: கடலுார் துறைமுகம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 22ம் ஆண்டு விழா நடந்தது.
பள்ளி சேர்மன் சிவக்குமார் தலைமை தாங்கினார்.
நிறுவனர் சொக்கலிங்கம், தாளாளர் கஸ்துாரி சொக்கலிங்கம், நிர்வாக செயல் அலுவலர் லஷ்மி சிவக்குமார், டாக்டர்கள் நந்தினி, கதிர்வேல், மக்கள் தொடர்பு அலுவலர் சிவராஜ் முன்னிலை வகித்தனர்.
ஒருங்கிணைப்பாளர் மஹாசுப்ரியா வரவேற்றார். பள்ளி முதல்வர் உதயகுமார் சாம் ஆண்டறிக்கை வாசித்தார்.சிறப்பு விருந்தினர் நடிகர் ஆரி அர்ஜூனன், கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் பள்ளி அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார்.
பள்ளியில் நடந்த திறனறித் தேர்வில் வகுப்பு வாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டில் பள்ளி கட்டண முழு விலக்களிக்கும் பள்ளி நிர்வாக கடிதம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
திருச்சியில் நடந்த இந்திய அளவிலான சாரண பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மார்ட்டினா நன்றி கூறினார்.