/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எஸ்.பி., அதிரடி நடவடிக்கை; வாரி குவித்த போலீசாருக்கு சிக்கல்
/
எஸ்.பி., அதிரடி நடவடிக்கை; வாரி குவித்த போலீசாருக்கு சிக்கல்
எஸ்.பி., அதிரடி நடவடிக்கை; வாரி குவித்த போலீசாருக்கு சிக்கல்
எஸ்.பி., அதிரடி நடவடிக்கை; வாரி குவித்த போலீசாருக்கு சிக்கல்
ADDED : ஜூன் 19, 2024 01:22 AM
சிதம்பரம் உட்கோட்டத்திற்குட்பட்ட, ஆன்மிக மகான் பிறந்த மண்ணில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, லாட்டரி உள்ளிட்ட அனைத்தும், தங்கு தடையினறி தாரளமாக புழங்குகிறது. அனைத்து நேரங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.
இதற்காக போலீசாரும் முறையாக கவனிக்கப்படுவதால், அவர்களும் கண்டுகொள்வதில்லை.
போலீசார் இடைத்தரகர் வைத்து, கையூட்டு பெறுவது குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு சென்றது.
அதையடுத்து, இதில் தொடர்புடைய, அதிகாரிகளுக்கு உளவு சொல்லும் பொருப்பில் இருந்த போலீஸ்காரர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
மேலும், தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு ஆதரவாக இருப்பதாக புகார் கூறப்பட்ட காக்கிகள் மீது, துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மாவட்ட போலீஸ் அதிகாரியின் இந்த அதிரடி, இப்பகுதி போலீசார் மட்டுமின்றி, மாவட்டத்தில் உள்ள கை சுத்தம் இல்லாத போலீசாரை அச்சமடைய செய்துள்ளது.
ஆனாலும், சம்மந்தப்பட்ட ஏரியாவில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதே தவிர கட்டுப்படுத்தப்படவில்லை என, சமூக நல விரும்பிகள் புலம்பி வருகின்றனர்.