/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறந்த கபடி வீரர் விருது பெற்ற போலீசுக்கு எஸ்.பி., பாராட்டு
/
சிறந்த கபடி வீரர் விருது பெற்ற போலீசுக்கு எஸ்.பி., பாராட்டு
சிறந்த கபடி வீரர் விருது பெற்ற போலீசுக்கு எஸ்.பி., பாராட்டு
சிறந்த கபடி வீரர் விருது பெற்ற போலீசுக்கு எஸ்.பி., பாராட்டு
ADDED : மே 10, 2024 01:25 AM

கடலுார்: சின்னமனுாரில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில் பெஸ்ட் ஆல் ரவுண்டர் விருதினை பெற்ற கடலுார் ஆயுதப்படை போலீசை எஸ்.பி., ராஜாராம் பாராட்டினார்.
தேனி மாவட்ட அமைச்சூர் கபடி கழகம் மற்றும் சின்ன மருது கபடி குழு அமைப்பு சார்பில், மாநில அளவிலான சீனியர் மாஸ்டர் கபடி போட்டி, சின்னமனுாரில் நடந்தது. இதில் கடலுார் மாவட்ட அணி உட்பட 12க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
கடலுார் மாவட்ட கபடி அணியில் அண்ணாமலை பல்கலைக் கழக விளையாட்டுத் துறை பேராசிரியர் சுப்ரமணியன் தலைமையில் 11 பேர் கொண்ட அணி பங்கேற்று இரண்டாம் பரிசு பெற்றனர்.
போட்டியில் கடலுார் ஆயுதப்படை போலீஸ் ஏட்டு ஞானமுருகன், பெஸ்ட் ஆல் ரவுண்டர் விருதினை பெற்றார். அவரை, எஸ்.பி., ராஜாராம் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார். ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரபத்மநாபன் உடன் இருந்தார்.