/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மல்யுத்த வீரர்களுக்கு எஸ்.பி., பாராட்டு
/
மல்யுத்த வீரர்களுக்கு எஸ்.பி., பாராட்டு
ADDED : ஆக 29, 2024 11:22 PM

கடலுார்: மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களை அழைத்து எஸ்.பி., ராஜாராம் பாராட்டினார்.
தென் மாநிலங்களுக்கு இடையிலான மல்யுத்த விளையாட்டு போட்டி, சேலம் அடுத்த மேட்டூரில் நடந்தது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மல்யுத்த வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில், தமிழ்நாடு அணி சார்பில் போட்டியில் பங்கேற்ற கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சவிதா, 53 கிலோ எடை பிரிவிலும், கார்த்திக் 79 கிலோ எடை பிரிவிலும், கலைவாணன் 86 கிலோ எடை பிரிவிலும் 'வெண்கல பதக்கம்' பெற்றனர். மல்யுத்த போட்டியில் பதக்கம் வென்றவர்களை, கடலூர் எஸ்.பி., ராஜாராம், எஸ்.பி, அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டினார்.

