/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓய்வு பெற்ற எஸ்.ஐ.,களுக்கு எஸ்.பி., ராஜாராம் கவுரவிப்பு
/
ஓய்வு பெற்ற எஸ்.ஐ.,களுக்கு எஸ்.பி., ராஜாராம் கவுரவிப்பு
ஓய்வு பெற்ற எஸ்.ஐ.,களுக்கு எஸ்.பி., ராஜாராம் கவுரவிப்பு
ஓய்வு பெற்ற எஸ்.ஐ.,களுக்கு எஸ்.பி., ராஜாராம் கவுரவிப்பு
ADDED : மே 02, 2024 12:22 AM

கடலுார் : கடலுாரில் பணி ஓய்வுப் பெறும் எஸ்.ஐ.,களுக்கு பொன்னாடை அணிவித்து, எஸ்.பி., ராஜாராம் கவுரவித்தார்.
கடலுார் மாவட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணி செய்த எஸ்.ஐ.,க்கள் செல்லதுரை, முருகன், கலைச்செல்வன், ரங்கநாதன், சிறப்பு எஸ்.ஐ.,க்கள் கிருஷ்ணமூர்த்தி, ரவிச்சந்திரன், ரவி, பாலசுப்ரமணியன், காவல் துறை அலுவலகம் அமைச்சு பணியாளர் ராஜாராம் ஆகிய 9 பேர் நேற்று பணி ஓய்வு பெற்றனர். இவர்களுக்கு எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.பி., ராஜாராம் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். வரும் காலங்களில் உடல் நலத்தை கவனித்து, குடும்பத்தார் மற்றும் நண்பருடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என கூறினார்.
மேலும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப் பலன்கள் அனைத்தும் உடன் கிடைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.