/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி மாணவர்கள் தேர்தல் விழிப்புணர்வு
/
பள்ளி மாணவர்கள் தேர்தல் விழிப்புணர்வு
ADDED : மார் 25, 2024 05:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி சிதம்பரம் வீனஸ் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சார்பில், நுாறு சதவிகித வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'VOTE 100% ' என்ற எழுத்து வடிவில், மாணவர்கள் நின்று விழிப்புணர்வு நிகழ்ச்சியை செய்து கண்பித்தனர்.
பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்வில், தாளாளர் குமார், முதல்வர் ரூபியால் ராணி, கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, துணை முதல்வர் அறிவழகன், உடற்கல்வி இயக்குனர் பிரபாகர், உடற்கல்வி ஆசிரியைகள் உமா, எப்சிமேரி ஆகியோர் பங்கேற்றனர்.

