/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மகளிர் விடுதியில் பாதுகாப்பு கேள்விக்குறி
/
மகளிர் விடுதியில் பாதுகாப்பு கேள்விக்குறி
ADDED : செப் 11, 2024 01:17 AM
மாவட்டத்தில் சமீபத்தில் நகராட்சி அந்தஸ்தை பெற்ற கடைகோடி நகரத்தில், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகே அரசு ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் அரசு மாணவியர் விடுதி உள்ளது.
இந்த இரண்டு விடுதிகளிலும், 150 மாணவியர் தங்கி கல்வி பயில்கின்றனர். விடுதியின் பின்புற மதிற்சுவர் அருகே குப்பை மலை போல குவிக்கப்பட்டுள்ளதாலும், சில இடங்களில் மதிற்சுவர் இல்லாததாலும், அதன் வழியே சமூக விரோதிகள் விடுதிக்குள் ஊடுருவி, மாணவிகளை அச்சுறுத்துகின்றனர்.
இதனால் விடுதி மாணவிகளுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளதாக, விடுதி நிர்வாகத்திடம் பெற்றோர் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் நடவடிக்கை ஏதும் இதுவரை இல்லை என, கூறப்படுகிறது. ஒரு மாதத்திற்கு மூன்று முறைக்கு மேல், மர்ம நபர்கள் விடுதிக்குள் நுழைந்தது குறித்து மாணவிகளும் புகார் அளித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.