/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குச்சிப்பாளையத்தில் செடல் உற்சவம்
/
குச்சிப்பாளையத்தில் செடல் உற்சவம்
ADDED : ஜூலை 03, 2024 03:03 AM

நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பம் அடுத்த கீழ்அருங்குணம் குச்சிபாளையம் மாரியம்மன் கோவில் செடல் உற்சவம் நடந்தது.
செடல் திருவிழாவையொட்டி, நேற்று காலை அம்மனுக்கு பால், தயிர், பன்னீர் போன்ற 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
அருகில் உள்ள கெடிலம் ஆற்றங்கரையில் பூஜைகள் செய்து பக்தர்கள் செடல் குத்தி வேண்டுதலை நிறைவேற்றினர். கிரேன் மற்றும் பொக்லைன் இயந்திரத்தில் 30 அடி உயரத்தில் முதுகில் அலகு குத்தி தொங்கியபடி பக்தர்கள் பறவை காவடி எடுத்தனர்.
அதேபோல் வேன், கார் போன்ற பல்வேறு வாகனங்களை முதுகில் அலகு குத்தி இழுத்து வந்தனர். பெண்கள் 25 அடி நீளமுள்ள அலகு குத்தி ஊர்வலமாக வந்தனர்.
அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.