/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விதை திருவிழா: எம்.எல்.ஏ., பங்கேற்பு
/
விதை திருவிழா: எம்.எல்.ஏ., பங்கேற்பு
ADDED : ஆக 06, 2024 06:59 AM

வேப்பூர் : புதிய தமிழா மரபு வேளாண் நடுவம் சார்பில் 2ம் ஆண்டு விதைத் திருவிழா வேப்பூர் கூட்டுரோட்டில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, விருத்தாசலம் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். நல்லூர் ஒன்றிய தி.மு.க., மாவட்ட கவுன்சிலர் சக்திவினாயகம் முன்னிலை வகித்தார். புதிய தமிழா மரபு வேளாண் நடுவம் ஒருங்கிணைப்பாளர் சபரி வரவேற்றார். காங்., நிர்வாகி முருகானந்தம்,, உதவியாளர் பாஸ்கர், இயற்கை விவசாய வல்லுனர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இயற்கை விவசாய பொருட்களின் விற்பனையாளர்கள், விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், ரசாயனம் கலக்காமல் இயற்கை முறையில் விவசாயம் செய்வது, சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வழிமுறைகள், விவசாய பொருட்களை மதிப்பு கூட்டுவது உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், இயற்கை விவசாய பொருட்களின் கண்காட்சி நடந்தது.