தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விதை நேர்த்தி தொழில்நுட்ப வெளிவளாக பயிற்சி

விதை நேர்த்தி தொழில்நுட்ப வெளிவளாக பயிற்சி

விதை நேர்த்தி தொழில்நுட்ப வெளிவளாக பயிற்சி


ADDED : ஜூலை 31, 2026 11:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2026 11:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி கிராமத்தில், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், பருத்தி, நெல் பயிரில் விதை உற்பத்தி மற்றும் விதை நேர்த்தி தொழில்நுட்பங்கள் குறித்த வெளிவளாக பயிற்சி நடந்தது.

பயிற்சிக்கு, வேளாண் துணை இயக்குநர் அமிர்தராஜ் தலைமை தாங்கினார். வேளாண் அறிவியல் நிலைய தலைவர் நடராஜன் பயிற்சியை துவக்கி வைத்தார். 

வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி சத்தியநாரயணன் கலந்துகொண்டு நெல் மற்றும் பருத்தியில் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார்.

விதை சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்பு துறை நடனசபாபதி, விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்து பேசினாார்.

இந்த பயிற்சியில் நெல் மற்றும் பருத்தி பயிருக்கான பல்வேறு விதை நேர்த்தி குறித்து செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது. மேலும், விதை அமிர்தம், உயிர் உரங்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கியின் முக்கியத்துவம் மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து விளக்கப்பட்டது.

இதில், வேளாண்அலுவலர் நடராஜன், உதவி வேளாண் அலுவலர்கள் பிரவின், சின்னசாமி, திவாகர், வட்டார தொழில்நுட்ப மேலாளர் கல்பனா, உதவி தொழில்நுட்ப மேலாளர் எட்வின் மற்றும் விவசாயிகள் உட்டபட பலர் பங்கேற்றனர்.

குமராட்சி வேளாண் உதவி இயக்குனர் தமிழ்வேல் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us