/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தகுதி சான்று இல்லாத ஆட்டோக்கள் பறிமுதல்
/
தகுதி சான்று இல்லாத ஆட்டோக்கள் பறிமுதல்
ADDED : செப் 01, 2024 11:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சிதம்பரம் பகுதிகளில் தகுதி சான்ற இல்லாமல் ஓடிய 15 ஆட்டோக்கள், மோட்டார் வாகன ஆய்வாளரால் பறிமுதல் செய்யப்பட்டது.
சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தகுதி சான்றிதழ் இல்லாமல் இயக்கப்பட்டுவதாக, தொடர்ந்து புகார் எழுந்தது.
அதனை தொடர்ந்து, சிதம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதில், தகுதிச் சான்றிதழ், புகை சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் ஓடிய 15 ஆட்டோக்களை பறிமுதல் செய்தார்.