/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகள் பறிமுதல்
/
பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகள் பறிமுதல்
ADDED : மே 12, 2024 04:38 AM
திட்டக்குடி: ராமநத்தம் அருகே அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான நாட்டு வெடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த ஆவட்டி கிராமத்தில் அனுமதியின்றி நாட்டுவெடிகள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு போலீஸ் மணிகண்டன் மற்றும் ராமநத்தம் போலீசார் ஆவட்டி கிராமத்தில் வசிக்கும் வெடி வியாபாரி பாண்டியன் மகன் பாரதி வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அதில், வெடிகள் விற்க உரிமம் பெற்றுள்ள இவர், அனுமதியின்றி நாட்டு வெடிகளை பதுக்கி வைத்து விற்பது தெரிய வந்தது. அதனையொட்டி, வீட்டு மாடியின் மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள நாட்டு வெடிகளை பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக பாரதி மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.