ADDED : ஜூலை 05, 2024 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு டிராக்டரில் மண் ஏற்றி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
நடுவீரப்பட்டு போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை போலீசார் நிறுத்தினர். அப்போது டிராக்டர் ஓட்டி வந்த வெ.பெத்தாங்குப்பம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த பரந்தாமன்,40; டிராக்டரை விட்டு விட்டு தப்பியோடினார். போலீசார் டிராக்டரை பரிசோதனை செய்ததில் அரசு அனுமதியின்றி டிராக்டரில் ஆற்று மணல் ஏற்றி வந்து தெரியவந்தது.
நடுவீரப்பட்டு போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து தப்பியோடிய பரந்தாமனை தேடி வருகின்றனர்.