/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள் தேர்வு
/
பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள் தேர்வு
ADDED : செப் 02, 2024 01:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த கே.பஞ்சங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.
ஊராட்சி துணை தலைவர் விஜயராஜா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் கோதை வரவேற்றார். கூட்டத்தில், பள்ளி மேலாண்மைக்குழு தலைவராக சந்திரலேகா, துணை தலைவராக செந்தமிழ்ச்செல்வி மற்றும் 21 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளுக்கு, பார்வையாளர் ராஜகுமாரி சான்றிதழ் வழங்கினார். கூட்டத்தில், வார்டு உறுப்பினர் மல்லிகா, ஆசிரியர்கள் சசிரேகா, ஆனந்தராஜ், எஸ்தர் குளோரி, சாதனா உட்பட பலர் பங்கேற்றனர்.