/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
யானைக்கால் நோயாளிகளுக்கு நோய் பராமரிப்பு சுய பயிற்சி
/
யானைக்கால் நோயாளிகளுக்கு நோய் பராமரிப்பு சுய பயிற்சி
யானைக்கால் நோயாளிகளுக்கு நோய் பராமரிப்பு சுய பயிற்சி
யானைக்கால் நோயாளிகளுக்கு நோய் பராமரிப்பு சுய பயிற்சி
ADDED : ஏப் 26, 2024 12:09 AM
கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் சிதம்பரம் தேசிய யானைக்கால் நோய் தடுப்புத் திட்டம் சார்பில் யானைக்கால் நோயாளிகளுக்கு நோய் பராமரிப்பு சுய பயிற்சி முகாம் நடந்தது.
கடலுார் புதுநகர் இரவு சிகிச்சை பிரிவு நோயாளிகளுக்கு சுய பயிற்சி மற்றும் உபகரணங்களை திட்ட அலுவலர் அரவிந்த ஜோதி வழங்கினார்.
மாவட்ட மண்டல பூச்சியியல் வல்லுநர் மீனா, மாவட்ட மலேரியா அலுவலர் பாலாஜி சிறப்புரையாற்றினர்.
இதில், யானைக்கால் நோய் அறிகுறிகள், சிகிச்சை முறைகள், நோய் தடுப்பு முறை குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
அப்போது, களப்பணி உதவியாளர்கள் கீதைகாந்தி, மலர்கொடி, களப்பணியாளர்கள் கண்ணையன், பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திட்ட சுகாதார ஆய்வாளர்கள் கோபிகிருஷ்ணன், மோகன், ஏழுமலை செய்திருந்தனர்.