/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கள்ளச்சாராயம் விற்பனை? அரசு அலுவலகங்களில் புகார் தெரிவிக்கலாம்
/
கள்ளச்சாராயம் விற்பனை? அரசு அலுவலகங்களில் புகார் தெரிவிக்கலாம்
கள்ளச்சாராயம் விற்பனை? அரசு அலுவலகங்களில் புகார் தெரிவிக்கலாம்
கள்ளச்சாராயம் விற்பனை? அரசு அலுவலகங்களில் புகார் தெரிவிக்கலாம்
ADDED : ஜூன் 23, 2024 04:58 AM

விருத்தாசலம்: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி சம்பவம் எதிரொலியாக, அரசு அலுவலகங்களில் கள்ளச்சாராயம் விற்பனை குறித்து புகார் தெரிவிக்கலாம் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பொது நல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
கள்ளச்சாராயத்தை தடுக்கும் வகையில், தமிழக அரசின் உத்தரவின் பேரில், அரசு அலுவலகங்களில் கள்ளச்சாராயம் குறித்து புகார் தெரிவிக்குமாறு, 9080731320 என்ற மொபைல் எண்ணுடன் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது. விருத்தாசலம் ஆர்.டி.ஓ., தாசில்தார் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.