/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிருஷ்ணசாமி பள்ளியில் கருத்தரங்கம்
/
கிருஷ்ணசாமி பள்ளியில் கருத்தரங்கம்
ADDED : ஜூன் 26, 2024 11:17 PM

கடலுார்: கடலுார் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் குறும்படம் விளக்கவுரை கருத்தரங்கம் நடந்தது.
பள்ளி முதல்வர் நடராஜன் தலைமை தாங்கினார். பள்ளி உயர்நிலை ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினா ப்ளாரென்ஸ் வரவேற்றார். மனோவியல் டாக்டர் பார்த்திபன், போதை எதிர்ப்பு குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு சிறப்புரையாற்றினார்.
முன்னதாக ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் போதை எதிர்ப்பு சுவரொட்டி எழுதுகின்ற போட்டி நடத்தப்பட்டு முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு, டாக்டர் பார்த்திபன் பரிசுகள் வழங்கினார். மைண்ட் கேர் கிளினிக் ஜெகப்பிரியா வாழ்த்துரை வழங்கினார். இதில், மாணவர்கள் போதை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.
பள்ளி தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் பரந்தாமன் நன்றி கூறினார்.