/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
செம்மேடு கெடிலம் ஆற்று பாலம் கட்டும் பணி அளவுக்கு அதிகமாக மணல் எடுப்பதால் ஆபத்து

ADDED : பிப் 26, 2025 05:09 AM

பண்ருட்டி அடுத்த செம்மேடு கெடிலம் ஆற்றங்கரையில் பாலம் கட்டும் பணிக்காக ஆற்றுமணல் எடுத்து பணி செய்வதால் பணிகள் தரமில்லாத நிலையில் உள்ளது.
பண்ருட்டி அடுத்த செம்மேடு கெடிலம் ஆற்றங்கரையில் கடந்த ஓர் ஆண்டிற்கு முன் 1கோடியே 30 லட்சம் மதிப்பில் நெடுஞ்சாலை கிராமசாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் பாலம் கட்டுமான பணிகள் துவங்கியது. பணியை பெரம்பலுாரை சேர்ந்த ஒப்பந்ததாரர் செய்துவருகின்றார்.
இதில் இப்பணிக்கான தகவல் பலகை இல்லை. பணிக்காக கெடிலம் ஆற்றங்கரையில் ஜெசிபி இயந்திரம் மூலம் மணல் எடுத்து கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
கட்டுமான பணிக்காக கரைகள் மேடாக்கு வதற்கும். அருகில் உள்ள மணல், ஆற்றின் மண்கள் எடுத்து சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலைத்துறை கிராமசாலைகள் திட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டும், காணாமல் உள்ளனர்.
ஆற்றில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் மணல் எடுப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறைய வாய்ப்பு உள்ளது.
குறிப்பிட்ட ஆழத்திற்கு மேல் மணல் எடுப்பதால் அந்த இடம் பள்ளமாக மாறி மழை காலங்களில் ஆழம் இருப்பது தெரியாத அளவிற்கு தண்ணீர் தேங்கி அதில் சிறுவர்கள் இறங்கி குளிக்கும் போது உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதற்கு மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.