/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மூத்தோர் தடகள போட்டிகள் 'மாஜி' டி.ஜி.பி., தலைமையில் ஆலோசனை
/
மூத்தோர் தடகள போட்டிகள் 'மாஜி' டி.ஜி.பி., தலைமையில் ஆலோசனை
மூத்தோர் தடகள போட்டிகள் 'மாஜி' டி.ஜி.பி., தலைமையில் ஆலோசனை
மூத்தோர் தடகள போட்டிகள் 'மாஜி' டி.ஜி.பி., தலைமையில் ஆலோசனை
ADDED : ஆக 01, 2024 06:41 AM

நெய்வேலி: தமிழ்நாடு மூத்தோர் தடகள கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நெய்வேலி வட்டம் 25ல் நடந்தது.
தமிழ்நாடு மூத்தோர் கழக தலைவரும், முன்னாள் டி.ஜி.பி.,யுமான தேவாரம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், என்.எல்.சி., மத்திய தொழிலக பாதுகாப்பு படை டி.ஜ.ஜி., சிவக்குமார், மூத்தோர் தடகள கழக செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் ராதாமணி, துணைத் தலைவர்கள் சுப்பையா, ஆனந்தகுமார், மாவட்ட செயலாளர் ராஜன் பாபு, நிர்வாகிகள் டெசி ஜோசப், ஆனந்தராஜ் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
பொருளாளர் ராதாமணி நன்றி கூறினார்.