தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ எள் அறுவடை பணிகள் தீவிரம்

எள் அறுவடை பணிகள் தீவிரம்

எள் அறுவடை பணிகள் தீவிரம்


ADDED : ஜூன் 10, 2026 08:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2026 08:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குள்ளஞ்சாவடி: எள் அறுவடை பணிகளில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

குள்ளஞ்சாவடி சுற்றுப்பகுதி கிராமங்களான அம்பலவாணன்பேட்டை, வழுதலம்பட்டு, ஆயிக்குப்பம், புலியூர், சமட்டிக்குப்பம், சுப்ரமணியபுரம், குறிஞ்சிப்பாடி சுற்றுப்பகுதி கிராமங்கள் ராஜாக்குப்பம், குறிஞ்சிப்பாடி வடக்கு, தெற்கு, பொன்வெளி, ஆடூர்குப்பம் உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாயிகள் தங்கள் வயல்களில் எள் பயிரிட்டனர். தொடர்ந்து, கோடை வெயிலை தாக்குப்பிடித்து இந்தாண்டு, நல்ல விளைச்சல் கிடைத்ததாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இதையடுத்து அறுவடை முடிந்து எள் செடிகள் பட்டறை போடப்பட்டு, 10 நாட்கள் கழித்து உலர்த்தப்பட்டு எள் செடிகளில் இருந்து பிரித்து எடுக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடுமையான உடல் உழைப்பு தேவைப்படும் இப்பணிகளில் கொளுத்தும் வெயிலையும் பாராமல், விவசாய தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us