ADDED : ஜூலை 24, 2026 04:21 PM
விருத்தாசலம்: ஆடி இரண்டாம் வெள்ளியையொட்டி, விருத்தாசலம் மணிமுக்தாற்றில் இருந்து பக்தர்கள் விமான அலகு, செடலணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விருத்தாசலம் மணலுார், முத்து மாரியம்மன் கோவிலில், இருந்து நேற்று காலை 9:00 மணிக்கு பக்தர்கள் மணிமுக்தாற்றுக்கு வந்தனர்.
சக்தி கரகம், பால்குடம், விமான அலகு அணிந்து ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, அம்மனுக்கு பாலபிேஷகம் செய்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதேபோல, செம்பளாக்குறிச்சி கருமாரியம்மன் கோவிலுக்கு மணிமுக்தாற்றில் இருந்து பால்குடம், செடலணிந்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
புலியூர் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம், அலகு அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், சுற்றியுள்ள கிராம கோவில்களுக்கும் மணிமுக்தாற்றில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.
இதனால், கடைவீதி, பாலக்கரை ரவுண்டானா உட்பட நகரின் பிரதான சாலைகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாகன நெரிசல் ஏற்பட்டது.
