தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ முன் விரோதத்தில் தேக்கு மரங்களுக்கு தீ வைப்பு

முன் விரோதத்தில் தேக்கு மரங்களுக்கு தீ வைப்பு

முன் விரோதத்தில் தேக்கு மரங்களுக்கு தீ வைப்பு


ADDED : மே 28, 2026 08:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2026 08:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: முன்விரோத தகராறில் தேக்கு மரங்களுக்கு தீ வைத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 

விருத்தாசலம் கல்லுாரி நகரை சேர்ந்தவர் உதயகுமார், 65; இவருக்கு தொரவளூர் பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தேக்கு மரங்களை நட்டு வளர்த்து வருகிறார். இந்நிலையில், தொரவளூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரனுக்கும், உதயகுமாருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

இதன் காரணமாக, கடந்த 4ம் தேதி உதயகுமார் வயலுக்கு ரஜேந்திரன் தீ வைத்துள்ளார். இதில், ரூ.6 லட்சம் மதிப்பிலான தேக்கு மரங்கள் எரிந்து நாசமாயின.

இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் ராஜேந்திரன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.  

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us