ADDED : ஜூலை 05, 2024 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: கடலூர் முதுநகர் சின்ன பிள்ளையார்மேடு, மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர், விக்னேஷ் மனைவி, திவ்யபாரதி, 26. இவர் நேற்று முன்தினம், குண்டியமுல்லுார் செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்தார்.
அப்போது வாலிபர் ஒருவர் திவ்யபாரதிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தால், பஸ்சை முதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்த முயன்றனர். அப்போது அந்த வாலிபர் பஸ்சில் இருந்து இறங்கி தப்பினார். நேற்று காலை, குள்ளஞ்சாவடி பஸ் நிறுத்தத்தில் திவ்யபாரதி நடந்து சென்றபோது, அதே வாலிபர் திவ்யபாரதி கையை பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
குள்ளஞ்சாவடி போலீசார், கோதண்ட ராமபுரம், புதுக்குளம், முருகன் கோவில் தெருவை சேர்ந்த, இளைய ராஜா, 33, மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.