ADDED : செப் 01, 2024 06:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், சந்திர மவுலீஸ்வரருக்கு சனி மகா பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.
இதையொட்டி, நேற்று காலை 9:30 மணியளவில் மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. காலை 10:00 மணியளவில் பிரகாரத்தில் உள்ள சந்திர மவுலீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், பன்னீர், திரவியப்பொடி ஆகியவைகளால் சிறப்பு அபிஷேகம்; 10:30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது.
ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதேபோன்று, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில், இறையூர் தாகம் தீர்த்தபுரீஸ்வரர் கோவில் நந்தி பகவானுக்கு சனி மகா பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.